/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொண்டை ஊசி வளைவில் ஜல்லி ஏற்றிய லாரி 'பல்டி'
/
கொண்டை ஊசி வளைவில் ஜல்லி ஏற்றிய லாரி 'பல்டி'
ADDED : நவ 13, 2025 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: கொல்லிமலையில் இருந்து, நேற்று முன்தினம் மாலை, ஜல்லிக்-கற்கள், எம்.சாண்ட் மணலை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அடி-வார பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
அப்போது, 1வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பியபோது, கட்டுப்-பாட்டை இழந்த வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்-ளானது. இந்த விபத்தில், சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் அவருடன் வந்த ஒருவர் என, இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

