/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆடி 2வது வெள்ளி; கோவில்களில் பூஜை
/
ஆடி 2வது வெள்ளி; கோவில்களில் பூஜை
ADDED : ஜூலை 27, 2024 12:43 AM
நாமக்கல்: ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம்.
இதில், ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் ஆகிய இரண்டுமே மிக விசேஷமான நாட்கள். ஆடி மாதம், ஈசனைவிட அம்பாளுக்கு அதிக சக்தி உள்ள மாதம். சக்திக்குள் சிவன் ஐக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.அதன்படி, ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில், அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையான நேற்று, ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில், ஒரு லட்சத்து, 8,000 கண்ணாடி வளையல்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர்.நேற்று முன்தினம் இரவு முதல் பெண்கள் வளையல்களை தோர-ணமாக கட்டும் பணியில் ஈடுபட்டனர். அம்மனுக்கு மட்டுமின்றி கோவில் வளாகத்திலும், வளையல்களால் தோரணம் அமைத்தி-ருந்தனர். இதேபோல், நாமக்கல், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், எரு-மப்பட்டி, சேந்தமங்கலம், குமாரபாளையம், மல்லசமுத்திரம், வெண்ணந்துார் உள்ளிட்ட மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பெண்கள் மஞ்சள், சிகப்பு புடவையில் கோவி-லுக்கு வந்து தரிசனம் செய்து சென்றனர்.

