/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பணியாளர்களுக்கு இறகுபந்து போட்டி
/
பணியாளர்களுக்கு இறகுபந்து போட்டி
ADDED : டிச 02, 2025 02:58 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, எஸ்.பி.பி., காலனி பகுதியில் தனியார் காகித ஆலையின், 'மனமகிழ் மன்றம்' சார்பில், இறகு பந்து போட்டி, கடந்த, 29, 30 என, இரண்டு நாட்கள் நடந்தது. அதில், தமிழ்நாடு காகித ஆலை, ஜே.எஸ்.டபுள்யூ., இந்தியா சிமென்ட்ஸ், சக்தி சர்க்கரை ஆலை, செட்டிநாடு சிமென்ட்ஸ், சேஷசாயி காகித ஆலை, பொன்னி சர்க்கரை ஆலை ஆகிய தொழிற் நிறுவனங்களை சேர்ந்த, 60க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, நேற்று முன்தினம் இரவு, பரிசளிப்பு விழா நடந்தது. சேஷசாயி காகித ஆலை நிதி இயக்குனர் ஸ்ரீநிவாஸ், பரிசு, கேடயம் வழங்கினர். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு தேவையான உணவுகளை, எஸ்.பி.பி., காகித ஆலை மனமகிழ் மன்ற தலைவர் அழகர்சாமி, துணை தலைவர் ராஜாசுந்தரம், செயலாளர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

