/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வீரர்களுக்கு கொடிநாள் நிதி தாராளமாக வழங்க அழைப்பு
/
வீரர்களுக்கு கொடிநாள் நிதி தாராளமாக வழங்க அழைப்பு
ADDED : டிச 07, 2025 09:20 AM
நாமக்கல்: 'கொடி நாள் நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக, இணையதளத்திலும் செலுத்தலாம்' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்-துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நம் தாய் நாட்டின் எல்லைகளை காக்கும் வகையில், கடும் குளிரிலும், வெப்பத்திலும், இயற்கை இடர்பாடுகளை எதிர்கொண்டு, இரவு பகல் பாராமல் பணியாற்றிய முப்படை வீரர்-களின்
தியாகங்களை போற்றும் வகையில், ஆண்டுதோறும், டிச., 7-ஐ, 'படைவீரர் கொடி' நாளாக, நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. கொடிநாள் நிதியானது, உடல் உறுப்புகளை
இழந்த படைவீரர்களின் மறுவாழ்வுக்கும், முன்னாள் படைவீரர்களின் நலன் மற்றும் குடும்ப நல்வாழ்விற்கும், மேம்பாட்டிற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.அதனால், தியாக சுடர்களாக விளங்கும் முப்படை வீரர்களின் நலன்காக்க, திரட்டப்படும் கொடிநாள் நிதிக்கு, பொதுமக்கள் தாராளமாக http://flagday.tn.gov.in என்ற
இணையதள முகவ-ரியில் செலுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்-கப்பட்டுள்ளது.

