தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய முகாம்

அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய முகாம்

அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய முகாம்


ADDED : ஆக 05, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:நாமக்கல்லில், அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் சேர, வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு முகாம் நடக்கிறது.

தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், அமைப்புசாரா தொழிலாளர்களை கண்டறிந்து, நலவாரியத்தில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இணையம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர் கள், வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள், மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்த அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களை அதிகளவில் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, நாமக்கல் நல்லிபாளையத்தில், மாவட்ட பதிவாளர் ஆபீஸ் எதிரே உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை ஆபீஸ் வளாகத்தில் செயல்படும், தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்ட ஆபீசில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமில், உடலுழைப்பு தொழிலாளர்கள் தங்களது விபரங்களை நேரடியாக தெரிவித்து பதிவு செய்து கொள்ளலாம். மேலும், tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விபரங்களுக்கு, தொழிலாளர் உதவி ஆணையர், சமூக பாதுகாப்பு திட்டம், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை ஆபீஸ், மாவட்ட பதிவாளர் ஆபீஸ் எதிரில், நல்லிபாளையம், நாமக்கல் -என்ற முகவரியிலோ அல்லது 04286-280220 என்ற போன் எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் என, நாமக்கல் கலெக்டர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us