ஆனைகட்டிபாளைய பட்டுக்கூடு ஏல மையத்தில் கலெக்டர் ஆய்வு
ஆனைகட்டிபாளைய பட்டுக்கூடு ஏல மையத்தில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 03, 2026 04:39 AM
ராசிபுரம்:ராசிபுரம்
அருகே, ஆனைகட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும், பட்டுக்கூடு ஏல
மையத்தின் செயல்பாடுகள் குறித்து, கலெக்டர் மதுபாலன் ஆய்வு செய்தார்.
அப்போது,
ஏல மையத்தில் தினமும் பட்டுக்கூடுகள் எப்படி ஏலம் விடப்படுகிறது,
பட்டுக்கூடுகளின் தரத்தை அதிகாரிகள் எவ்வாறு சோதனை செய்கின்றனர்
என்பது குறித்து கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
பட்டுக்கூடுகளுக்கான விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை,
விவசாயிகளுக்கு செய்து தரப்பட்டுள்ள குடிநீர், நிழற்கூடம் உள்ளிட்ட
அடிப்படை வசதிகள் குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர்,
விவசாயிகள் தரப்பில் கலெக்டரிடம், 'பட்டுக்கூடுகளின் தரத்திற்கு
ஏற்ப கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏல மையத்தில்,
கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும்' என்று
கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து பரிசீலனை செய்து, பட்டு
வளர்ச்சித்துறை அதிகாரிகள் மூலம் அனைத்து வசதிகளும் செய்து
தரப்படும்' என்று கலெக்டர் உறுதி அளித்தார். பட்டு வளர்ச்சித் துறை
அதிகாரிகள், ஏல மைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
