தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ராசிபுரம் துணிக்கடையில் கள்ளநோட்டு? 3 பேரிடம் எழுதி வாங்கிய போலீசார்

ராசிபுரம் துணிக்கடையில் கள்ளநோட்டு? 3 பேரிடம் எழுதி வாங்கிய போலீசார்

ராசிபுரம் துணிக்கடையில் கள்ளநோட்டு? 3 பேரிடம் எழுதி வாங்கிய போலீசார்


ADDED : செப் 01, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராசிபுரம்;; ராசிபுரத்தில் உள்ள துணிக்கடையில், கள்ள-நோட்டுகளை கொடுத்து துணி வாங்கியதாக வந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.

ராசிபுரம் நகர், கிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன், 45; இவர், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வணிக வளாகத்தில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு, நேற்று முன்தினம் இரவு, வாலிபர் ஒருவர் துணி வாங்க வந்தார். அங்கு துணிகளை தேர்வு செய்த வாலிபர், கடையில் இருந்த பெண் ஊழியரிடம், 200 ரூபாய் தாள்களாக, மொத்தம், 1,400 ரூபாய் கொடுத்-துள்ளார். துணிக்கான தொகையை கழித்துக்-கொண்ட அப்பெண் ஊழியர், மீதமுள்ள, 150 ரூபாயை அந்த வாலிபரிடம் திருப்பிக் கொடுத்-துள்ளார்.சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த உரிமை-யாளர் ராஜேந்திரன், பணப்பெட்டியில் இருந்த, 200 ரூபாய் நோட்டுகளை எடுத்து பார்த்தபோது, அவை அனைத்தும் கள்ளநோட்டுகள் என உரி-மையாளர் சந்தேகமடைந்தார். கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்-சிகளையும் ஆய்வு செய்தார். அதில் கள்ளநோட்-டுகளை கொடுத்துச்சென்ற வாலிபரின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது.

இதையடுத்து அந்த வீடியோ காட்சிகளுடன், புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு சென்ற ராஜேந்-திரன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு தேடினர். அப்போது, துணி வாங்கி சென்ற வாலிபர் உள்பட, 3 பேர் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தனர். அவர்-களை கையும் களவுமாக பிடித்த ராஜேந்திரன் மற்றும் அவரது தரப்பினர், மூன்று பேரையும் தாக்க தொடங்கினர்.

தகவலறிந்த சென்ற ராசிபுரம் போலீசார், அவர்-களை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், நோட்டுகள் நல்ல நோட்டுகளா, கள்ள நோட்டு-களா என முடிவு செய்ய முடியாததால், மூன்று பேர் முகவரியையும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்-டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us