/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.கோடு நகராட்சி கவுன்சிலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா
/
தி.கோடு நகராட்சி கவுன்சிலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா
தி.கோடு நகராட்சி கவுன்சிலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா
தி.கோடு நகராட்சி கவுன்சிலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா
ADDED : டிச 02, 2025 02:57 AM
திருச்செங்கோடு, திருச்செங்கோடு நகராட்சி, சீதாராம்பாளையத்திலிருந்து கழிவுநீர், மழைநீர் செல்லும் வாய்க்காலை, நேற்று முன்தினம், சேதப்படுத்தி உள்ளனர். இதனால், சாக்கடை அடைபட்டு, கழிவுநீர் தேங்கி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் வீடுகளுக்குள் செல்ல முடியாமல் தவித்தனர். நேற்று காலை, 1வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் மாதேஸ்வரன், 7வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் கலையரசி, 8வது வார்டு, பா.ஜ., கவுன்சிலர் தினேஷ், 10வது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர் ராஜவேல் ஆகியோர் திருச்செங்கோடு நகராட்சி நுழைவு வாயில் முன், தங்களது வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி கமிஷனர் வாசுதேவன், இன்ஜினியர் சரவணன் ஆகியோர், கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, திருச்செங்கோடு டவுன் இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் நகராட்சி அதிகாரிகள், பொக்லைன் இயந்திரத்தை கொண்டுச்சென்று அடைக்கப்பட்ட மண்ணை அகற்றி, கழிவுநீர் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர். கழிவுநீரை அகற்றிய பின், கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

