/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இயற்கை விவசாயம் மேற்கொள்ள விவசாயிகள் தயார்; ரசாயன உர வினியோகத்தை தவிர்க்க வேண்டுகோள்
/
இயற்கை விவசாயம் மேற்கொள்ள விவசாயிகள் தயார்; ரசாயன உர வினியோகத்தை தவிர்க்க வேண்டுகோள்
இயற்கை விவசாயம் மேற்கொள்ள விவசாயிகள் தயார்; ரசாயன உர வினியோகத்தை தவிர்க்க வேண்டுகோள்
இயற்கை விவசாயம் மேற்கொள்ள விவசாயிகள் தயார்; ரசாயன உர வினியோகத்தை தவிர்க்க வேண்டுகோள்
ADDED : ஜூலை 27, 2024 12:47 AM
மக்கல்: 'இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள, ரசாயன உரம் வழங்கு-வதை குறைக்க வேண்டும்' என, விவசாயிகள் குறைதீர் கூட்-டத்தில் வலியுறுத்தப்பட்டது.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், ''நாமக்கல் மாவட்-டத்தின், ஆண்டு இயல்பு மழையளவு, 716.54 மி.மீ., கடந்த, 25 வரை, 291.56 மி.மீ., மழை பெறப்பட்டுள்ளது. ஜூலை முடிய இயல்பு மழையளவை விட, 67.79 மி.மீ., அதிகமாக மழை பெறப்-பட்டுள்ளது. நடப்பாண்டில், ஜூன் மாதம் வரை, நெல், 30 ஹெக்டேர், சிறுதானியங்கள், 14,560 ஹெக்டேர், பயறு வகைகள், 3,051 ஹெக்டேர், எண்ணெய் வித்துக்கள், 16,220 ஹெக்டேர், பருத்தி, 534 ஹெக்டேர், கரும்பு, 2,369 ஹெக்டேர் என, மொத்தம், 36,764 ஹெக்டேரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்-யப்பட்டுள்ளன. நடப்பாண்டில், 110 ஏக்கரில், மத்திய பருத்தி ஆராய்ச்சி மூலம் அடர் நடவு முறையில், பருத்தி சாகுபடி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை, விவசாயிகள் பயன்-படுத்திக்கொள்ளலாம்,'' என்றார்.
தொடர்ந்து நடந்த விவாதம் பின்வருமாறு:மெய்ஞானமூர்த்தி, விவசாயி: கடந்த காலங்களில் பெய்த மழையின் போது, கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அவற்றை சரி செய்ய, அரசு வேளாண் பொறியியல் துறை மூலம், நிதி உதவி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை விவசாயத்தை, மத்திய, மாநில அரசுகள் ஊக்கப்படுத்துகிறது. அதே நேரத்தில், கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், ரசாயன உரத்தை திணிக்கின்றனர். நாங்கள் என்ன செய்வது, ரசாயன உரம் வழங்குவதை குறைத்தால், இயற்கை விசாயத்தை மேற்கொள்ள நாங்கள் தயார்.துரைசாமி, விவசாயி: விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பால் கொள்-முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். போதிய மழை இல்லாததால், பயிர்கள் கருகி வீணாகி, விவசாயிகளுக்கு நஷ்-டத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால், நாமக்கல்லை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.பாலசுப்ரமணியம், பொதுச் செயலாளர், விவசாய முன்னேற்றக் கழகம்: கடந்த மாதம், ஐந்து மனுக்கள் கொடுத்தேன். இதுவரை எந்த பதிலும் வரவில்லை. மனு அளித்தால், 30 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். ஆனால், பதில் வராமல் இருப்பது, எதற்கு மனு அளிக்க வேண்டும் என்பதுபோல் உள்ளது. மேலும், வருவாய் துறை-யினர், அரசுக்கு தவறான வரைபடம் அனுப்பியதால், 'சிப்காட்' தொழிற்பேட்டை திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்-ளது. அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.

