தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல் வெண்ணந்துார், நவ. 4

வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல் வெண்ணந்துார், நவ. 4

வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல் வெண்ணந்துார், நவ. 4


ADDED : நவ 04, 2026 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2026 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெண்ணந்துார் வட்டாரத்தில், நடப்பு பருவத்தில் வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடப்பு, 2026-27ம் ஆண்டுக்கான சிறப்பு பருவ வெங்காய சாகுபடி தொடர்பாக, வெண்ணந்துார் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் வித்யா பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வெண்ணந்துார் வட்டாரத்தில், 2026 -- 27ம் ஆண்டு சிறப்பு பருவத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்களது பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். வெங்காய பயிருக்கு வரும், 30ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, காப்பீடு பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான பிரீமியம் தொகையாக வெங்காய பயிருக்கு ஏக்கருக்கு ரூபாய், 2,109 வீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக 'வெங்காயம் II' என்ற திட்ட பெயரின் கீழ், காப்பீட்டு பிரீமியம் தொகையை செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஆவணங்கள் தேவை

பயிர் காப்பீட்டை பதிவு செய்வதற்கு, நடப்பு பருவத்திற்கான கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய அடங்கல், நிலத்தின் பட்டா மற்றும் சிட்டா நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேமிப்பு கணக்கு புத்தக நகல், அடையாள ஆவணம் ஆகியவை தேவை. இவற்றுடன் காப்பீடு பதிவு செய்யும் விவசாயி பெயர், முகவரி, சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலப்பரப்பு அளவு, புல எண், உட்பிரிவு எண் மற்றும் பயிரிடப்பட்டுள்ள நிலம் அமைந்துள்ள வருவாய் கிராமம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் விண்ணப்பத்தில் சரியாக குறிப்பிட வேண்டும்.

முன்கூட்டியே முன்பதிவு

விவசாயிகள் உரிய காலத்தில் காப்பீட்டு தொகையை செலுத்தி, முன்கூட்டியே பதிவு செய்து கொள்வதன் மூலம், இயற்கை இடர்பாடுகள் மற்றும் எதிர்பாராத பாதிப்புகளால் ஏற்படும் மகசூல் இழப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். எனவே, வெண்ணந்துார் வட்டாரத்தை சேர்ந்த வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வரும், 30க்குள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி பயிர் காப்பீடு செய்து பலனடைய வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us