/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புறநகர் பஸ் ஸ்டாண்ட் கேட்டு மனித சங்கிலி போராட்டம்
/
புறநகர் பஸ் ஸ்டாண்ட் கேட்டு மனித சங்கிலி போராட்டம்
புறநகர் பஸ் ஸ்டாண்ட் கேட்டு மனித சங்கிலி போராட்டம்
புறநகர் பஸ் ஸ்டாண்ட் கேட்டு மனித சங்கிலி போராட்டம்
ADDED : ஜூலை 27, 2024 12:47 AM
ராசிபுரம்: ராசிபுரத்தில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் எனக்-கேட்டு, ராசிபுரம் நகர மக்கள் வளர்ச்சி நலக்குழுவினர் மனித சங்-கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராசிபுரம் நகர பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க நகராட்சி சார்பில் தீர்-மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தினந்தோறும் பல்-வேறு கோரிக்கைகளுடன் மக்கள் மனு அளித்து வருகின்றனர். பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என, ராசிபுரம் நகர மக்கள் வளர்ச்சி நலக்குழுவினர், மனு அளித்து வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன் ஊர்வலமாக சென்று நகராட்சியில் மனு அளித்தனர். நேற்று மாலை, ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் முதல் கடைவீதி வரை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்-டனர். அப்போது, ராசிபுரத்திற்கு புறநகர் பஸ் ஸ்டாண்ட் வேண்டும் என கோஷமிட்டனர். தொடர்ந்து நகராட்சி அலுவல-கத்தில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மனு அளித்து சென்றனர்.

