/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கார்கில் வெற்றி தின நினைவேந்தல் நிகழ்ச்சி
/
கார்கில் வெற்றி தின நினைவேந்தல் நிகழ்ச்சி
ADDED : ஜூலை 27, 2024 12:47 AM
மோகனுார்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், கார்கில் வெற்றி வெள்ளி விழா, தேசிய மாணவர் படை சார்பில் நினைவு கூறப்பட்டது.
1999ல் லடாக் எல்லை கோட்டு பகுதியை கைப்-பற்ற பாகிஸ்தான் ராணுவம் முயற்சித்த போது, நம் இந்திய ராணுவ வீரர்கள் வீரம் செறிந்த யுத்தம் நடத்தி, பாகிஸ்தானை கார்கில் யுத்தத்தில் வீழ்த்தினர்.அவற்றை நினைவு கூறும் வகையில், ராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலியும், தேசிய மாணவர் படை அணிவகுப்பும் நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்து, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.'கார்கில் வெற்றியில், இந்திய ராணுவ வீரர்களின் பங்கு' என்ற தலைப்பில், பொருளியல் துறை தலைவர் குமாரவேலு, தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினன்ட் சவுந்திரராஜன் ஆகியோர் பேசினர்.மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, தேசிய மாணவர் படை அலுவலர் லெப்டிணன்ட் சவுந்திரராஜன் செய்திருந்தார்.* மோகனுார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், தேசிய மாணவர் படை சார்பில், கார்கில் விஜய் நிவாஸ் தினம் கடைப்பி-டிக்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் அருணாசலம் தலைமை வகித்து, ராணுவ வீரர்களின் செயல்பாடுகளை விளக்-கினார். தொடர்ந்து, கார்கில் வெற்றி போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு, மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்-சலி செலுத்தப்பட்டது.*குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், 25ம் ஆண்டு கார்கில் வெற்றி விழா என்.சி.சி., சார்பில், தலைமை ஆசி-ரியர் ஆடலரசு தலைமையில் கொண்டாடப்பட்டது. எஸ்.ஐ., பழ-னிச்சாமி,மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கார்கில் போரில் உயிர் நீத்தவர்களுக்கு மவுன அஞ்-சலி, வீர வணக்கம் செலுத்தப்பட்டது.* குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், முதல்வர் ரேணுகா தலைமையில் கார்கில் போர் நினை-வேந்தல் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. ராணுவ அதிகாரி ரவி-வர்மன் மரியாதை செலுத்தினார். கல்லுாரி பேராசிரியர்கள் உள்-பட பலர் கலந்து கொண்டனர்.

