/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : டிச 02, 2025 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையத்தில் அமைந்துள்ள மாரியம்மன், விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் மஹா கும்பாபிஷேக விழா, கணபதி பூஜையுடன் துவங்கியது.
நேற்று காலை, கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. விழாவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

