/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பஸ் டிரைவர் கொலை; வாலிபருக்கு 'குண்டாஸ்'
/
பஸ் டிரைவர் கொலை; வாலிபருக்கு 'குண்டாஸ்'
ADDED : ஜூலை 27, 2024 12:48 AM
நாமக்கல்: மல்லசமுத்திரம் அடுத்த பாலகாட்டூர் காட்டுபாளையத்தை சேர்ந்-தவர் செல்வம், 54; தனியார் பஸ் டிரைவர்.
கடந்த, 3ல், சொத்து தகராறில், கூலிப்படையை ஏவி, செல்வம் கொலை செய்யப்-பட்டார். இது தொடர்பாக, மல்லசமுத்திரம் போலீசார், கூலிப்ப-டையை சேர்ந்த திருச்செங்கோடு, ராமாபுரம் கொசவம்பாளை-யத்தை சேர்ந்த விக்னேஷ், 26, உள்பட, 9 பேரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.இதில், விக்னேஷ் மீது திருச்செங்கோடு ரூரல், மல்லசமுத்திரம், வெப்படை ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் வழிப்பறி வழக்-குகள் நிலுவையில் உள்ளன. இதனால், அவரை குண்டர் சட்-டத்தில் சிறையில் அடைக்க, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், கலெக்ட-ருக்கு பரிந்துரைத்தார்.அவரது பரிந்துரையை ஏற்று கலெக்டர் உமா, விக்னேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதற்கான நகலை, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்னேஷிடம், போலீசார் வழங்கினர்.

