/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு
/
நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு
நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு
நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு
ADDED : நவ 13, 2025 03:30 AM
ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தை சேர்ந்த, 16 கவுன்சிலர்கள் தலைவர் லட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர, கோரிக்கை மனு அளித்தனர். கடந்த ஜூலை, 25ல் நம்-பிக்கை இல்லா தீர்மானத்திற்கு கூட்டம் நடத்த முடிவு செய்யப்-பட்டது. இதுகுறித்து, வழக்குகள் நிலுவையில் இருந்ததால் மன்ற கூட்டம் நடத்தவில்லை.
தற்போது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நம்பிக்கை இல்லா தீர்மானம் நடத்தி அதன் அறிக்கையை, வரும், 17க்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். அதனால், நாளை காலை, 11:00 மணிக்கு ப.வேலுார் டவுன் பஞ்., அலுவலகத்தில் தலைவர் லட்-சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடக்கி-றது. அப்போது, அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க மற்றும் வெளி நபர்கள் உள்ளே வராமல் தடுக்க வேண்டியும், டி.எஸ்.பி., சங்கீதாவிடம், ப.வேலுார் டவுன் பஞ்., சார்பில், செயல் அலுவலர் சண்முகம் மற்றும் ஊழியர்கள் போலீஸ் பாது-காப்பு கேட்டு கோரிக்கை மனு நேற்று அளித்தனர்.