/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அமச்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்
/
அமச்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்
ADDED : ஜூலை 27, 2024 12:48 AM
நாமக்கல்: ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையான நேற்று, நாமக்கல் சின்ன-முதலைப்பட்டி அமச்சி அம்மன் கோவிலில், பால்குட ஊர்வலம் நடந்தது.
காலை, 9:00 மணிக்கு, பெரியவீதி காவடி பழனியாண்-டவர் கோவிலில் இருந்து, ஏராளமான பெண்கள் பால் குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.தொடர்ந்து, அம்மனுக்கு பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 7:00 மணிக்கு, புஷ்பாஞ்சலி, மாவிளக்கு பூஜை, ஊஞ்சல் உற்சவம், சிறப்பு அலங்கார ஆராதனை நடந்தது.நாமக்கல் நகராட்சி கவுன்சிலர் சசிகலா, சேவை அறக்கட்டளை தலைவர் பழனியப்பன் உள்பட பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.

