/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தற்கொலைக்கு முயன்ற மாணவி காதலன் மீது போலீசார் வழக்கு
/
தற்கொலைக்கு முயன்ற மாணவி காதலன் மீது போலீசார் வழக்கு
தற்கொலைக்கு முயன்ற மாணவி காதலன் மீது போலீசார் வழக்கு
தற்கொலைக்கு முயன்ற மாணவி காதலன் மீது போலீசார் வழக்கு
ADDED : டிச 02, 2025 03:02 AM
ராயக்கோட்டை,கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே வசிப்பவர், 22 வயது இளம்பெண்; நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலுள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., நர்சிங் மூன்றாமாண்டு படிக்கிறார். ராயக்கோட்டை அருகே பால்னாம்பட்டியை சேர்ந்த விவசாயி வெங்கடேஷ், 24. இருவரும் காதலித்து வந்தனர். கடந்த, 29ம் தேதி, மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ராயக்கோட்டை போலீசில், நேற்று முன்தினம் மாணவி கொடுத்த புகாரில், வெங்கடேஷ் தன்னை திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதி கொடுத்து, தன்னுடன் பாலியல் ரீதியாக உறவு கொண்டதாகவும், அதன் பின் கடந்த, 27ம் தேதி, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதன் படி வெங்கடேஷ் மீது, ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

