தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மதுபானம் விற்பனை செய்தவருக்கு காப்பு

மதுபானம் விற்பனை செய்தவருக்கு காப்பு

மதுபானம் விற்பனை செய்தவருக்கு காப்பு


ADDED : ஜூலை 01, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அருகே, மதுபான பாட்டில்களை விற்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

நாமகிரிப்பேட்டை அண்ணா காலனி ஆண்கள் கழிவறை அருகே, நாமகிரிப்பேட்டை எஸ்.ஐ., சிவா மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர், பொதுமக்களுக்கு இடையூறாக நின்று கொண்டு, அரசு மதுபானத்தை வாங்கி வந்து சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் விசாரணையில், அவர் நாமகிரிப்பேட்டை, சின்னஅரியாக்கவுண்டம்பட்டி, அண்ணா காலனியை சேர்ந்த வேல்முருகன், 42 என்பதும், இவர் டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்றதை அடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து, 26 எக்ஸ்பிரஸ் பிராந்தி பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us