வரும் 11ல் தாலுகா அலுவலகங்களில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
வரும் 11ல் தாலுகா அலுவலகங்களில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
ADDED : ஜூலை 09, 2026 04:29 AM
நாமக்கல்:'மாவட்டத்தில்
உள்ள, 8 தாலுகா அலுவலகங்களில் வரும், 11ல், பொது வினியோகத்திட்ட
மக்கள் குறைதீர் முகாம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் மதுபாலன்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல்
மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்தின் மூலம், பெயர் சேர்த்தல்,
நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், மொபைல் எண் பதிவு
மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள், நுகர்வோர் பாதுகாப்பு
சட்டத்தின்படி மேற்கொள்ள, பொது வினியோக திட்டத்தின் சேவைகளை,
அனைத்து தரப்பு மக்களுக்கு வழங்கவும், ரேஷன் கார்டில் உள்ள குறைகளை
நிவர்த்தி செய்யும் வகையில், பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள்
முகாம் நடக்கிறது. அதன்படி வரும், 11 காலை, 10:00 முதல், பகல் 1:00 மணி
வரை, நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை,
திருச்செங்கோடு, ப.வேலுார் மற்றும் குமாரபாளையம் ஆகிய, 8 தாலுகா
அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், சம்பந்தப்பட்ட வட்ட
வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடக்கிறது. பொதுமக்கள் குறைதீர்
சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, பொது வினியோக திட்டம் மற்றும் நுகர்வோர்
பாதுகாப்பு சட்டம் தொடர்பான குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
