/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெள்ளத்தால் விவசாயிகள், மக்கள் பாதிப்பு ரூ.10,000 உதவித்தொகை வழங்க கோரிக்கை
/
வெள்ளத்தால் விவசாயிகள், மக்கள் பாதிப்பு ரூ.10,000 உதவித்தொகை வழங்க கோரிக்கை
வெள்ளத்தால் விவசாயிகள், மக்கள் பாதிப்பு ரூ.10,000 உதவித்தொகை வழங்க கோரிக்கை
வெள்ளத்தால் விவசாயிகள், மக்கள் பாதிப்பு ரூ.10,000 உதவித்தொகை வழங்க கோரிக்கை
ADDED : டிச 02, 2025 02:55 AM
நாமக்கல், 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள், பொதுமக்களுக்கு, மத்திய அரசு நேரடியாக, 10,000 ரூபாய் பொங்கல் உதவித்தொகை வழங்க வேண்டும்' என, விவசாய முன்னேற்ற கழக நிறுவன தலைவர் செல்ல ராசாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர், பிரதமருக்கு மனு அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில், பல இடங்களில் கனமழையால், விவசாய தோட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைந்து, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அறுவடை காலங்களில் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். ஒரு பகுதியில் வெள்ளம், மற்றொரு பகுதியில் வேளாண் பயிர்களில் பல்வேறு பூச்சிகள் தாக்குதலால், விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயத்தை சார்ந்துள்ள பல்வேறு தொழில்களும் நலிவடைந்து வருகிறது. விரைவில் பொங்கல் பண்டிகை வர உள்ளதால், தை பொங்கலை விவசாயிகளும், கூலி தொழிலாளர்களும் கொண்டாட, அவர்களிடம் போதிய நிதி வசதி இல்லை. சமீபத்தில், கோவை வந்த பிரதமர் விவசாயிகளை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், பொங்கல் விழா மற்றும் உழவர் தினத்தை விவசாயிகளும், கூலி தொழிலாளர்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில், வெள்ள நிவாரணமாகவும், பொங்கல் பரிசாகவும், பொதுமக்களின் ரேஷன் கார்டு மூலம், மத்திய அரசு நேரடியாக, 10,000 ரூபாய் வீதம் வங்கி கணக்கில் உதவித்தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

