தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு இயக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு இயக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு இயக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை


ADDED : ஜூலை 07, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 05:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாமக்கல்; 'சொந்த பயன்பாட்டு வாகனங்களை, வாட-கைக்கு இயக்கும் உரிமையாளர்கள் மீது நடவ-டிக்கை எடுக்கக்கோரி, நாமக்கல் மாவட்ட சுற்-றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரை-வர்கள் சங்கத்தினர், கலெக்டரிடம் மனு அளித்-தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு இயக்குவது அதிக-ரித்து வருகிறது. நடவடிக்கை எடுக்கக்கோரி, பல-முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபகாலமாக, சொந்த பயன்-பாட்டு வாகனங்களை வாடகைக்கு இயக்குப-வர்கள் அதிகளவில் உள்ளனர். மேலும், சில போலீஸ் ஸ்டேஷனில் அலுவலக பணிகளுக்கு சொந்த பயன்பாட்டு வாகனங்களையே வாட-கைக்கு இயக்குகின்றனர்.அதேபோல், பள்ளி மாணவர்களை ஏற்றிக்-கொண்டு, மாத வாடகைக்கும் இயக்குகின்றனர். அதனால், சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்ப-துடன், வாகனத்தையும் சிறைபிடித்து அபராதம் விதிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us