/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொடர் மழையால் நெற்பயிர்கள் செழிப்பு
/
தொடர் மழையால் நெற்பயிர்கள் செழிப்பு
ADDED : டிச 09, 2025 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: தொடர் மழை மற்றும் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் வருவதால், பள்ளிப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் நடவு செய்த நெற்பயிர்கள், பசுமையாக காணப்படுகிறது.
மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில், கடந்த ஜூலை மாதம் முதல் பாசனத்திற்கு தண்ணீர் வருகிறது. இந்த வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்தி, பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், 10,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், வாய்க்காலில் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் வருவதாலும், நெற்பயிர்கள் சுமையாக காணப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் நெற்பயிர்கள் அறுவடைக்கு வந்து விடும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

