/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தாலுகா ஆபீசில் எஸ்.ஐ.ஆர்., உதவி மையம் துவக்கம்
/
தாலுகா ஆபீசில் எஸ்.ஐ.ஆர்., உதவி மையம் துவக்கம்
ADDED : நவ 14, 2025 01:37 AM
குமாரபாளையம், நகுமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில், எஸ்.ஐ.ஆர்., உதவி மையம் துவக்க விழா தாசில்தார் பிரகாஷ் தலைமையில் நடந்தது.
வாக்காளர்கள் ஒவ்வொரு வரும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுதும் படிவம் கொடுக்கும் பணியில் ஓட்டுச்சாவடி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். படிவம் பூர்த்தி செய்வதில், பொதுமக்கள் பலருக்கு பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இதற்கு தீர்வாக, குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர்., உதவி மையம் துவக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் படிவம் சம்பந்தமான சந்தேகங்களை இங்கு சென்று நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துவக்க விழாவில் குமாரபாளையம் தொகுதி தேர்தல் பிரிவு தாசில்தார் செல்வராஜ், வட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரி, முதுநிலை வருவாய் அலுவலர் சரவணகுமார், வி.ஏ.ஓ., முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

