/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க உத்தரவு
/
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க உத்தரவு
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க உத்தரவு
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க உத்தரவு
ADDED : மார் 20, 2024 10:40 AM
சென்னை: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொல்லிமலையில் உள்ள அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், கோவில் நிலங்களை அளவிட்டு, ஆக்கிரமிப்பு இருந்தால் சட்டப்படி அகற்றும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில், விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில் 'கோவில் நிலத்தில் 138 ஆக்கிரமிப்பாளர்கள் உள்ளனர். அவர்களை வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பது என்பது, பக்தர்களின் உரிமையை பறிப்பது போலாகும். கோவில் நிலத்தில், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். முறையாக பராமரிக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும். சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருந்தால், அவர்களுக்கு எதிராக, குற்றவியல் நடவடிக்கையை, 4 மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும்.

