/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வேலை வாங்கி தருவதாக பண மோசடி நிறுவனம் முன் திருச்சி வாலிபர் தர்ணா
/
வேலை வாங்கி தருவதாக பண மோசடி நிறுவனம் முன் திருச்சி வாலிபர் தர்ணா
வேலை வாங்கி தருவதாக பண மோசடி நிறுவனம் முன் திருச்சி வாலிபர் தர்ணா
வேலை வாங்கி தருவதாக பண மோசடி நிறுவனம் முன் திருச்சி வாலிபர் தர்ணா
ADDED : நவ 13, 2025 03:26 AM
நாமக்கல்: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 18.91 லட்சம் ரூபாய் ஏமாற்றிய நிறுவனம் முன், திருச்சி வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருச்சி, பொன் நகரை சேர்ந்தவர் முகமது சலீம் மகன் முகமது பாசில்ஷா, 22; இன்ஜினியர். இவர், சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து, வெளிநாட்டில் வேலை வாங்கி தரக்-கோரி, நாமக்கல்லில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றை அணு-கினார்.அதற்கு தனியார் நிறுவனத்தினர், 'லண்டனில் வேலை வாங்கி தருவதாகவும்; 19 லட்சம் ரூபாய் செலவாகும்; அங்கு சென்று வேலை செய்தால் மாதம், மூன்று லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்-கலாம்' என தெரிவித்துள்ளனர்.
மேலும், '40 நாட்களில் வெளிநாட்டிற்கு அனுப்பி, வேலையில் அமர்த்தி விடுவதாகவும்' உறுதியளித்தனர். இதை நம்பி, பல்-வேறு தவணையாக, 18 லட்சத்து, 91,810 ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், பேசியபடி வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த முகமது பாசில்ஷா, நாமக்கல் போலீஸ் எஸ்.பி., விமலாவிடம் புகாரளித்துள்ளார்.
இந்நிலையில், தான் கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுத்தரக்-கோரி, நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள அந்த நிறுவனத்தின் முன், நேற்று மாலை, 6:00 மணிக்கு, முகமது பாசில்ஷா அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

