ADDED : ஜூலை 06, 2026 04:39 AM
அ நிறம் | அளவு
சேந்தமங்கலம்:ஈரோடு
மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே, கரட்டுப்பாளையம் பகுதியை
சேர்ந்தவர் சுரேஷ் மகன் அரவிந்த், 23. சென்னையில் உள்ள தனியார்
கம்பெனியில் பணிபுரிகிறார்.
இவர், டூவீலரில், இரண்டு நாட்களுக்கு
முன் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தார். நேற்று மதியம், மாசிலா அருவி
அருகே உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் திருச்சி
மாவட்டம், மண்ணச்சநல்லுார் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் வாசு, 23, ஓட்டிவந்த டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து அரவிந்த் டூவீலர் மீது மோதியது.
இதில்
தலையில் படுகாயமடைந்த வாசு, நாமக்கல் அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகிறார். வாழவந்தி நாடு போலீசார் விசாரிக்கின்றனர்.
