/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிணற்றில் தவறி விழுந்த பெண் சடலமாக மீட்பு
/
கிணற்றில் தவறி விழுந்த பெண் சடலமாக மீட்பு
ADDED : ஜன 26, 2025 04:28 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, தச்சன்காடு பகுதியை சேர்ந்த மாணிக்கம் மனைவி மாரியம்மாள், 44; கூலித்தொழிலாளி. இவ-ரது மகன்கள் மூர்த்தி, 21, ஹரிபிரகாஷ், 15. கடந்த, 10 ஆண்டுக-ளுக்கு முன் கணவன் இறந்துவிட்டதால், மகன்களை கூலி-வேலை செய்து கவனித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் ஓரம், மாரியம்மாள் நடந்து சென்றுள்ளார். அப்போது, கால் தவறி கிணற்றில் விழுந்-துள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்-துக்கு விரைந்து சென்று, நீண்ட நேர தேடுதலுக்கு பின், மாரியம்-மாளை சடலமாக மீட்டனர். வெண்ணந்துார் போலீசார் விசாரிக்-கின்றனர்.

