ADDED : நவ 13, 2025 03:27 AM
நாமக்கல்: ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி, நாமக்கல் தட்டா-ரத்தெரு, காமாட்சியம்மன் உடனமர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள அக்னி காலபைரவருக்கு, சிறப்பு பூஜை, அலங்-காரம் செய்யப்பட்டது.
மாலை, 5:00 மணிக்கு அக்னி காலபைரவருக்கு மஞ்சள், கும்-குமம், தேன், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஏலக்காய், திராட்சை, அதிரச மாலைகள் அணிவிக்கப்பட்டன. அதேபோல், உற்சவருக்கும் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* மல்லசமுத்திரம் அருகே, மோர்பாளையத்தில் உள்ள பைரவ-நாத மூர்த்தி கோவிலில், மதியம், 12:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம், ஆராதனை நடந்-தது. பெண்கள் வெண்பூசணியில் தீபமேற்றி வழிபாடு நடத்தினர்.
* சேந்தமங்கலம் சவுந்தரவள்ளி அம்பாள் சமேத சோமேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள பைரவருக்கு, வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி கவச அலங்கா-ரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

