sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

முதியோருக்கு அடைக்கலமான 'ஆனந்த் குடில்' கேரளா பிராமண சபை ஏற்பாடு

/

முதியோருக்கு அடைக்கலமான 'ஆனந்த் குடில்' கேரளா பிராமண சபை ஏற்பாடு

முதியோருக்கு அடைக்கலமான 'ஆனந்த் குடில்' கேரளா பிராமண சபை ஏற்பாடு

முதியோருக்கு அடைக்கலமான 'ஆனந்த் குடில்' கேரளா பிராமண சபை ஏற்பாடு


ADDED : பிப் 27, 2025 09:57 PM

Google News

ADDED : பிப் 27, 2025 09:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு,; பாலக்காடு மாவட்டத்தில், தனிமையில் வாடும் முதியோருக்கு அடைக்கலமாய் விளங்குகிறது, 'ஆனந்த் குடில்' என்ற முதியோர் இல்லம்.

கேரள மாநிலம், பாலக்காடு சந்திரநகர் ஜோதிநகரில் உள்ளது 'ஆனந்த் குடில்' என்ற முதியோர் இல்லம். கேரள மாநில பிராமண சபையின் கீழ் செயல்படும் இந்த முதியோர் இல்லத்தில், 60 வயதுக்கு மேலான, 45 முதியோர்கள் உள்ளனர். இதில், வயதான நான்கு தம்பதிகளும், 26 பெண் முதியோர்களும் உள்ளனர்.

கூட்டு குடும்பம்


இவர்களில், 100 வயதான திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலகுடாவை சேர்ந்த ராஜலட்சுமி என்பவரும் ஒருவர். இவர், கடந்த 16 ஆண்டுகளாக மன மகிழ்ச்சியுடன் இங்கு இருப்பதாக கூறுகிறார்.மேலும், 'ஆனந்த் குடில்' சொந்த இல்லம் போல் மாறி விட்டது. இங்கு, சந்தோஷத்துடன் வசித்து வருகிறோம்,' என்கிறார், நல்லேப்பிள்ளியை சேர்ந்த, 92 வயதான பாலா அம்மாள்.

திருச்சூர் சேர்ந்த லலிதாம்பாள், 85, தனிமை என்ற நிலையை மறந்து, 14 ஆண்டுகளாக இங்குள்ளவர்களுடன் குடும்பமாக வாழ்வதாக கூறுகிறார்.

மனதில் இருக்கும் பாரத்தை மறந்து, மற்றவர்களுடன் பேசி, சிரித்து கூட்டுக்குடும்பமாக வாழ்கிறோம், என்கிறார், கடந்த, 10 ஆண்டுகளாக குடிலில் இருக்கும் திருமிற்றைக்கோடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் நம்பூதிரிப்பாடு, 74. இப்படி, இங்குள்ள ஒவ்வொருவரும், சந்தோஷத்துடன் வாழ்கின்றனர். 'ஆனந்த் குடில்' இல்லத்தின் தலைவர் சிதம்பரநாதன் கூறியதாவது:

சமூகத்தின் நலனுக்காக கேரளா பிராமண சபை சார்பில், 1992ல் 'ஆனந்த் குடில்' மையம் துவங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில், 10 முதியோர்களை தங்க வைக்கும் வசதி தான் இருந்தது.

அதன்பின், இத்திட்டத்தை விரிவுபடுத்துவதின் ஒரு பகுதியாக, 2020ல் ஏற்கனவே இருந்த கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கியது.

சிருங்கேரி சாரதா பீடம் ஸ்ரீ சன்னிதானம் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ விதுசேகரபாரதி இந்தக் கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். 2024ல் கட்டுமான பணிகள் நிறைவடைந்தது. இதற்கு, 3.5 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டது. சமூக நலன் கருதி, பலர் அளித்த நன்கொடையால் இத்திட்ட பணிகளை பூர்த்தி செய்ய முடிந்தது.

இந்த மையத்தில், வாசிப்பு அறை, பிரார்த்தனை மண்டபம், விருந்தினர் ஓய்வறை, 'லிப்ட்' வசதி, பிரத்யேக மருத்துவ பராமரிப்பு அறை, சாப்பாட்டு மண்டபம் உட்பட அனைத்து வசதிகளும் உள்ளன.

இங்கு, 55 பேர் வசிப்பதற்கான வசதிகள் உள்ளன. தற்போது, 45 பேர் உள்ளனர். இவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், குறைந்த கட்டணத்தில் செய்து கொடுக்கிறோம். 0491 2570172, 96334 83959 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us