தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வளர்ச்சி திட்ட பணிகள் 90 சதவீதம் நிறைவு கண்காணிப்பு குழு கூட்டத்தில் எம்.பி., ராஜா தகவல்

வளர்ச்சி திட்ட பணிகள் 90 சதவீதம் நிறைவு கண்காணிப்பு குழு கூட்டத்தில் எம்.பி., ராஜா தகவல்

வளர்ச்சி திட்ட பணிகள் 90 சதவீதம் நிறைவு கண்காணிப்பு குழு கூட்டத்தில் எம்.பி., ராஜா தகவல்


ADDED : ஜூலை 07, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ‘நீலகிரியில், 90 சதவீதம் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளது,’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. எம்.பி.ராஜா தலைமை வகித்தார். ஊட்டி எம்.எல்.ஏ., போஜராஜன், கலெக்டர் லட்சுமி பவ்யா முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

எம்.பி.ராஜா நிருபர்களிடம் கூறுகையில்,‘‘நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்கான மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. 90 சதவீதம் பணிகள் முடிவுற்றுள்ளது இன்னும் கூடுதலாக என்னென்ன பணிகள் தேவை என, கண்டறியப்பட்டுள்ளது. தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விலையில்லா வீட்டு பணிகள், வேகமாக நடந்து வருகிறது. அதிகாரிகள் உரிய பங்களிப்பை அளித்து வருகின்றனர்,’’ என்றார். எம்.எல்.ஏ.,க்கள் திராவிடமணி, ராஜூ அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us