ADDED : பிப் 27, 2025 10:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி, ;ஊட்டி நகரில் இரவில் தெருநாய் தொல்லை அதிகரித்து வருவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஊட்டி பஸ் ஸ்டாண்ட், அப்பர் பஜார், ஐந்து லாந்தர், கம்ஷியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலைகளில், இரவு நேரங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இரவில் பணி முடித்து நடந்து செல்பவர்களை சில இடங்களில் நாய்கள் துரத்தி வருகின்றன.
மேலும், பூங்காவில் சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள்; இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை கடிக்க வருவதால், பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

