/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை எடை போடும் கம்பியில் துாக்கில் தொங்கிய வாலிபரின் உடல் மீட்கப்பட்ட வாலிபரின் உடல் குன்னுார் போலீசார் தீவிர விசாரணை மீட்ட போலீசார் தீவிர விசாரணை

ADDED : பிப் 25, 2025 10:12 PM
குன்னுார், ; குன்னுார் கம்பிசோலை மலை பகுதியில் நேற்று முன்தினம் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்த போது துர்நாற்றம் வீசியதுடன், கழுகுகள் சுற்றுவதை பார்த்துள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, பசுந்தேயிலை எடைபோடும் கம்பியில் ஒரு வாலிபரின் உடல் துாக்கில் தொங்கியது தெரியவந்தது.
தகவலின் பேரில், அருவங்காடு போலீசார் அங்கு சென்றனர். அப்போது அவர் அணிந்திருந்த பேன்ட் மூலம் துாக்கு போட்டிருந்தது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு நீலகிரி எஸ்.பி., நிஷா, டி.எஸ்.பி., ரவி தலைமையிலான போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சென்று சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய் சிறிது துாரம் சென்று, மீண்டும் இறந்த இடத்திற்கு திரும்பி வந்துள்ளது. வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக, ஊட்டி மருத்துவ கல்லுாரி மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அருவங்காடு போலீசார், தற்கொலை பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் கூறுகையில்,'அந்த வாலிபர், வட மாநிலம் ஜார்கண்ட் பகுதியை சேர்ந்த லக் ஷாசூரன், 38, என்பதும், கோவையில் இருந்து பஸ்சில் ஒரு பெண்ணுடன் வந்ததும் தெரிய வந்தது. அந்த பெண் யார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, மற்ற விவரங்கள் தெரியவரும்,' என்றனர்.