தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சாமுண்டி பகுதி டாஸ்மாக் மதுக்கடையை அகற்றணும்

சாமுண்டி பகுதி டாஸ்மாக் மதுக்கடையை அகற்றணும்

சாமுண்டி பகுதி டாஸ்மாக் மதுக்கடையை அகற்றணும்


ADDED : ஜூலை 02, 2026 08:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 08:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ‘ஊட்டியில் சாமுண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும்,’என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஊட்டி நகரில் முக்கிய சாலையாக எட்டினன்ஸ் சாலை உள்ளது. இவ்வழியாக குன்னுார் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு அரசு பஸ்கள் தனியார் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகிறது.

இப்பகுதியில், அங்கன்வாடி, கோவில், பள்ளிவாசல் ஆகியவை அருகருகே உள்ளன. இப்பகுதியில் மதுக்கடை கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

பொது மக்கள் கூறுகையில்,‘இந்த டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.எனவே, சாமுண்டி பகுதியில் உள்ள மதுக்கடையை வேறு இடத்திற்கு உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us