/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெரியநாயக்கன்பாளையத்தில் 24 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
/
பெரியநாயக்கன்பாளையத்தில் 24 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
பெரியநாயக்கன்பாளையத்தில் 24 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
பெரியநாயக்கன்பாளையத்தில் 24 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
ADDED : மார் 17, 2024 11:37 PM
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம், தடாகம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 24 பேர் தங்களது துப்பாக்கிகளை போலீசார் வசம் ஒப்படைத்தனர்.
லோக்சபா தேர்தல் நடைமுறை நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. தங்களுடைய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக துப்பாக்கிகளை வைத்துள்ள நபர்கள், அதை அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும் என, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, பொதுமக்கள் தாங்கள் வைத்திருந்த,15 துப்பாக்கிகளை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் வசம் ஒப்படைத்தனர். இதேபோல தடாகம் போலீஸ் ஸ்டேஷனில், 9 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டன.
இது குறித்து போலீசார் கூறுகையில்,' தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன், 4ம் தேதி வரை அமலில் உள்ளதால், அதுவரை துப்பாக்கிகள் போலீசாரின் ஆயுதப்படை பிரிவில் இருக்கும். அதன் பின்னரே, துப்பாக்கிகள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்படும்.
வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் காவலாளிகள் பயன்படுத்தும் துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வங்கி பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை வைத்துக் கொள்ளலாம்' என்றனர்.

