/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காசநோய் பரிசோதனை முகாம் 70 பேர் பங்கேற்று பயன்
/
காசநோய் பரிசோதனை முகாம் 70 பேர் பங்கேற்று பயன்
ADDED : டிச 09, 2025 06:10 AM
கூடலுார்: கூடலுார் சூண்டியில் நடந்த காசநோய் பரிசோதனை முகாமில், 70 பேர் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர்.
கூடலுார் ஓவேலி சூண்டியில், மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு சார்பில், காசநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை காச நோய் பிரிவு மேற்பார்வையாளர் 'விஜயகுமார் காசநோய் வருவதற்கான காரணங்கள், நோய்க்கான அறிகுறிகள், சிகிச்சை முறைகள்,' குறித்து விளக்கினார்.
தொடர்ந்து, 70 பேருக்கு காசநோய் பரிசோதனைகள் செய்யப்பட்டது. கூடலுார் அரசு மருத்துவமனையில் அடுத்தகட்ட பரிசோதனை செய்யப்பட்டு, காசநோய் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
முகாமில், காசநோய் பிரிவு முதுநிலை மேலாளர் மனோஜ், ஆய்வக மேற்பார்வையாளர் மணிகண்டன், 'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், ஓவேலி அரசு ஆரம்ப சுகாதார மைய செவிலியர்கள் சசிகலா, பிந்து, கனகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

