/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒரு லிட்டர் கெரசினுக்காக மாற்றுத்திறனாளி அலைக்கழிப்பு
/
ஒரு லிட்டர் கெரசினுக்காக மாற்றுத்திறனாளி அலைக்கழிப்பு
ஒரு லிட்டர் கெரசினுக்காக மாற்றுத்திறனாளி அலைக்கழிப்பு
ஒரு லிட்டர் கெரசினுக்காக மாற்றுத்திறனாளி அலைக்கழிப்பு
ADDED : டிச 09, 2025 06:13 AM

ஊட்டி: ஒரு லிட்டர் மண்ணெண்ணைக்காக மாற்றுத்திறனாளி நபரை மூன்று மாதம் அலை கழித்த ரேஷன் கடை ஊழியரை, அதிகாரிகள் எச்சரித்தனர்.
ஊட்டி அருகே, பிங்கர் போஸ்ட் வீராசாமி லைனில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி கிருஷ்ணன், அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகிறார். இவருக்கு மாதந்தோறும் ரேஷனில் வழங்கப்படும் ஒரு லிட்டர் மண்ணெண்ணை கடந்த மூன்று மாதமாக வழங்கப்படவில்லை.
சம்மந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியரிடம் முறையிட்டும் பல்வேறு காரணங்களை கூறி தட்டி கழித்துள்ளார். பாதிக்கப்பட்ட கிருஷ்ணன், புகார் மனுவுடன் கலெக்டர் அலுவலக குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்தார். எழுந்து நடக்க முடியாத இவர் படிக்கட்டு வழியாக ஊர்ந்து கலெக்டரை பார்க்க முற்பட்டார்.
அப்போது அங்கு வந்த, ஊட்டி வட்ட வழங்கல் அலுவலக பெண் ஊழியர் அவரிடம் விசாரணை நடத்தினார். அதன்பின், பிங்கர் போஸ்ட் ரேஷன் கடை ஊழியரின் புகார் மனு குறித்து தெரிவித்து, அவரை கலெக்டர் அலுவலகம் வர சொன்னார். அங்கு வந்த கடை ஊழியரை வட்ட வழங்கல் அதிகாரி எச்சரித்து அனுப்பினார்.
தாசில்தார் குப்புராஜ் நிருபர்களிடம் கூறுகையில், ''சம்மந்தப்பட்ட மாற்றுத்திறனாளி நபருக்கு மூன்று மாதத்திற்கான மூன்று லிட்டர் மண்ணெண்ணை, தாயுமானவர் திட்டத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.

