/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் காயத்துடன் கண்டுபிடிப்பு
/
துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் காயத்துடன் கண்டுபிடிப்பு
துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் காயத்துடன் கண்டுபிடிப்பு
துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் காயத்துடன் கண்டுபிடிப்பு
ADDED : டிச 09, 2025 06:11 AM

பாலக்காடு: துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட தொழிலதி பரை, உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்ட நிலையில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் காளிகாவு பகுதியைச்சேர்ந்த தொழிலதிபர் முகமதலி 68. சவுதி அரேபியா மற்றும் கேரளாவில் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இவருக்கு உள்ளன.
இவர் தனது வீட்டில் இருந்து, சவுதி அரேபியாவுக்கு செல்ல கொச்சி விமான நிலையத்திற்கு இரவில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலக்காடு மாவட்டம் திருமிற்றக்கோடு கோழிக் காட்டிரி பாலம் அருகே, காரில் பின் தொடர்ந்து வந்த முகமூடி அணிந்த நால்வர் கும்பல், காரை தடுத்து நிறுத்தி துப்பாக்கி முனையில் அவரை கடத்திச் சென்றனர்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள், சாலிசேரி போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் அரவிந்தாக் ஷன் தலைமையிலான போலீஸ் படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை கோதகுறுச்சி என்ற பகுதியில் உள்ள பூட்டிக்கிடக்கும் வீட்டில் இருந்து, உடல் முழுவதும் காயங்களுடன், கும்பலிடமிருந்து தப்பியோடிய முகமதலியை கண்ட அப்பகுதி மக்கள், அவரை வாணியம்குளம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்குச் சென்று, அவரிடம் நடத்திய விசாரணையில் கடத்தலுக்கு காரணம் தொழில் தொடர்பான விரோதம் என்பது தெரியவந்தது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

