போதை பொருள் விற்பனை: 4 பேர் கைது: 1.5 கிலோ போதை வஸ்துக்கள் பறிமுதல்
போதை பொருள் விற்பனை: 4 பேர் கைது: 1.5 கிலோ போதை வஸ்துக்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 07, 2026 07:06 AM

அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், போதை பொருள் வழக்குகளில் தொடர்புடைய, 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் பயன்பாடு குறித்து சோதனை செய்து நடவடிக்கை எடுக்க, நீலகிரி எஸ்.பி. பிருந்தா உத்தரவிட்டார். இதன் பேரில், குற்ற தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் குன்னுார் போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர். தொடர்ந்து, அருவங்காடு பகுதியில் சந்தோஷ்,30, குன்னுாரில் மணிகண்டன்,26, வெலிங்டனில் பெலிக்ஸ்,30, அரவிந்த்,26, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கஞ்சா உட்பட பல்வேறு போதை வஸ்துக்கள், 1.5 கிலோ வரை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களிடம் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
