/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட எல்லையில் வயநாடு பேரிடரின் போது.... சிதறிய மக்கள்!: வாக்காளர்களை தேடும் கேரள வேட்பாளர்கள்
/
மாவட்ட எல்லையில் வயநாடு பேரிடரின் போது.... சிதறிய மக்கள்!: வாக்காளர்களை தேடும் கேரள வேட்பாளர்கள்
மாவட்ட எல்லையில் வயநாடு பேரிடரின் போது.... சிதறிய மக்கள்!: வாக்காளர்களை தேடும் கேரள வேட்பாளர்கள்
மாவட்ட எல்லையில் வயநாடு பேரிடரின் போது.... சிதறிய மக்கள்!: வாக்காளர்களை தேடும் கேரள வேட்பாளர்கள்
ADDED : டிச 09, 2025 06:16 AM

பந்தலுார்: கேரள மாநிலம் வயநாடு சூரல்மலை சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த வாக்காளர்களை தேடி வேட் பாளர்கள் பயணித்து வருகின்றனர். கேரள மாநிலம் வயநாடு சூரல்மலை, முண்டக்கை, புஞ்சரிமட்டம், அட்டமலை பகுதிகளில், கடந்த, 2024, ஜூலை 30ல் ஏற்பட்ட நிலச்சரிவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதில், 413 பேர் உயிரிழந்ததாகவும், 293 பேர் காணாமல் போனதாகவும், கேரள மாநில அரசு தெரிவித் திருந்தது.
11ல் உள்ளாட்சி தேர்வு வரும், 11ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்பகுதிகளில் உயிரோடு மீட்கப்பட்டு, பல்வேறு இடங்களிலும் இடம் பெயர்ந்த வாக்காளர்களை தேடி வேட்பாளர்கள் பயணித்து வருகின்றனர்.
அதில், 11வது வார்டுக்கு உட்பட்ட பகுதியாக இருந்த, முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில், உள்ள இரண்டு ஓட்டுச் சாவடிகளில் வாழ்ந்த, 980 குடும்பங்களில், 2,286 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
மீதமுள்ள, 270 குடும்பங்கள் இந்நிலையில், தற்போது, 270 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கு உள்ளனர். அதில், பேரிடரில் உயிரிழந்தது போக ஆயிரம் வாக்காளர்கள், தமிழகத்தின் சேரம்பாடி, கேரள மாநிலம், பாலக்காடு, புல்பள்ளி, ஆனந்தவாடி ஆகிய பகுதிகளில், இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அதேபோல், 10-வது வார் டுக்கு உட்பட்ட, அட்டமலை பகுதியில், 1130 வாக்காளர்கள் இருந்த நிலையில், அவர்களில் உயிரிழந்தது போக, 825 வாக்காளர்கள் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
பல்வேறு கட்சியினர் போட்டி இந்த வார்டு பகுதியில், யூ.டி.எப்., சார்பில் மன்சூர், எல்.டி.எப். சார்பில் சஹாத், பா.ஜ., சார்பில் விஜயன், சுயேட்சை பேட்பாளர் சித்திக் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இங்கு ஓட்டுச்சாவடி மையங்களாக செயல்பட்ட அரசு பள்ளிகள், பேரிடரில் சிக்கி மயான அமைதியில் உள்ள நிலையில், வேட்பாளர்களும் தங்கள் தொகுதி வாக்காளர்களை தேடி, ஒவ்வொரு பகுதியாக பயணித்து வருகின்றனர். உள்ளூர் மக்கள், போலீசார் துணையுடன் தகவல்களை சேகரித்து, நீலகிரி மாவட்டம் பந்தலுார் சுற்றுப்புற பகுதிகள் உட்பட கேரள பகுதிகளில் வாகனங்களை எடுத்து தேடி வருகின்றனர். கடந்த தேர்தலின் போது, உள்ளூர் பகுதியில் குடியிருந்த வாக்காளர்களை அழைத்து வர, கேரளா மாநில அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், வெளியூர்களில் வசித்து வரும் வாக்காளர்களை புதிய பட்டியலில் சேர்த்து, ஓட்டு போட அழைத்து வருவதற்கான நடவடிக்கையில் அரசும், அரசியல் கட்சியினரும் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றன.

