/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குப்பைகள் அகற்றாததால் சுகாதார சீர்கேடு
/
குப்பைகள் அகற்றாததால் சுகாதார சீர்கேடு
ADDED : டிச 09, 2025 06:11 AM

கோத்தகிரி: கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில் குப்பைகள் அகற்றாததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி- ஊட்டி வழித்தடத்தில் அமைந்துள்ள கட்டுப்பட்டு பஜாரில், கடைகள், கிளினிக்குகள், தபால் அலுவலகம் உட்பட, அதிகளவில் குடியிருப்புகள் உள்ளன. கிராம புறங்களில் இருந்து, நகர பகுதிக்கு சென்று வர, கட்டபெட்டு பஜாரை கடந்து செல்ல வேண்டும்.
இதனால், மக்கள் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. தவிர, ஊட்டிக்கு சென்று வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், பஜார் பகுதியில் அன்றாட சேகரமாகும் குப்பை, நடுஹட்டி ஊராட்சிக்கு சொந்தமான, சாலையோரத்தில் கொட்டப்படுகிறது.
இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள், உடனுக்குடன் அகற்றப்படாமல் தேங்கியுள்ளது. இதனால், துர்நாற்றத்துடன் கொசு தொல்லை அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது.
மேலும், வாகனங்களை ஒருங்கே, சாலையோரத்தில் நிறுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, நடுஹட்டி ஊராட்சி நிர்வாகம், குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம்.

