/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு நாயக்கர் சமுதாய 25ம் ஆண்டு விழா மக்கள் முன்னேற்றம் காண அறிவுரை
/
காட்டு நாயக்கர் சமுதாய 25ம் ஆண்டு விழா மக்கள் முன்னேற்றம் காண அறிவுரை
காட்டு நாயக்கர் சமுதாய 25ம் ஆண்டு விழா மக்கள் முன்னேற்றம் காண அறிவுரை
காட்டு நாயக்கர் சமுதாய 25ம் ஆண்டு விழா மக்கள் முன்னேற்றம் காண அறிவுரை
ADDED : டிச 09, 2025 06:17 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில், காட்டுநாயக்கர் சமுதாய சங்க, 25ஆம் ஆண்டு விழா நடந்தது.
அய்யன்கொல்லி அத்திச்சால், கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்கத்தை உருவாக்கிய குட்டன் தலைமை வகித்தார். சமுதாய தலைவர் சந்திரன் வரவேற்று பேசுகையில், ''காட்டுநாயக்கர் சமுதாய பழங்குடியின மக்கள், 2,500 பேர் வாழ்ந்து வருகின்றனர்.
வனப்பகுதிகளை விட்டு வெளியே வர அச்சம் கொண்டிருந்த மக்கள், தற்போது கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.
மேலும், அரசு மூலம் பழங்குடியின மக்களின் வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கு, பல்வேறு சுய வேலைவாய்ப்பு திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனை சமுதாய மக்கள் முறையாக பயன்படுத்தி, வாழ்வில் முன்னேற்றம் காண முன் வரவேண்டும்,'' என்றார்.
மேலும், கேரளா மாநிலம் ஆதிவாசி ஐக்கிய வேதி அமைப்பின், நிர்வாகிகள் பிந்து (கொல்லம்), சஜி, ராமகிருஷ்ணன், அசோகன் (மானந்தவாடி), ராமகிருஷ்ணன்(நாகர்ஹோலா) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, சமுதாய வளர்ச்சி மற்றும் கல்வி, பொருளாதாரத்தில் மேம்பட வேண்டியதன் அவசியம் குறித்து பேசினர். தொடர்ந்து சமுதாய கலாசார நடனம், கலாசார பாடல்கள் இடம்பெற்றதுடன், அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை மாதன், வெள்ளு, வாசு, நாராயணன், சிவன், ராதா உள்ளிட்ட, கிராம மக்கள் செய்திருந்தனர்.

