/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீட்டு வாசலுக்கு வந்த சிறுத்தை -கோழியை துாக்கி சென்றதால் அச்சம்
/
வீட்டு வாசலுக்கு வந்த சிறுத்தை -கோழியை துாக்கி சென்றதால் அச்சம்
வீட்டு வாசலுக்கு வந்த சிறுத்தை -கோழியை துாக்கி சென்றதால் அச்சம்
வீட்டு வாசலுக்கு வந்த சிறுத்தை -கோழியை துாக்கி சென்றதால் அச்சம்
ADDED : டிச 09, 2025 06:10 AM
பந்தலுார்: பந்தலுார் அருகே படைச்சேரி கிராமத்திற்கு விசிட் செய்த, சிறுத்தை கோழி கூண்டை உடைத்து கோழியை துாக்கி சென்றதால் மக்கள் அச்சமடைந்தனர்.
பந்தலுார் அருகே தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் படைச்சேரி கிராமம் அமைந்துள்ளது. அங்கு, 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், கிராமத்திற்கு அடிக்கடி சிறுத்தைகள் வந்து சென்ற நிலையில், இதனை கண்காணிக்க கணேசன் என்பவர் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தினார்.
இந்நிலையில், இவரது வீட்டு வாசலுக்கு வந்த சிறுத்தை, கோழி கூண்டை உடைத்து ஒரு கோழியை துாக்கி சென்றது. மீண்டும் மற்றொரு கோழியை துாக்க முயன்ற போது, சப்தம் கேட்டு வீட்டினுள் இருந்தவர்கள் வெளியே வந்து சிறுத்தையை விரட்டினர்.
மக்கள் கூறுகையில், ' இங்குள்ள தேயிலை தோட்டத்தின் ஒற்றையடி பாதையில் பள்ளி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள், தினசரி சென்று வரும் நிலையில், சிறுத்தையால் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து, சிறுத்தையை பிடித்து வனப்பகுதியில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

