'பெண் குழந்தைகளை காப்போம்': ஊட்டியில் கையெழுத்து இயக்கம்
'பெண் குழந்தைகளை காப்போம்': ஊட்டியில் கையெழுத்து இயக்கம்
ADDED : ஜூலை 07, 2026 07:08 AM
ஊட்டி: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 'பெண் குழந்தைகளை காப்போம் ; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டது.
ஊட்டியில், கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில்,''பாலின பாகுபாட்டை ஒழிக்கவும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி மற்றும் உரிமைகளை உறுதி செய்யும் நோக்கிலும், பாலின சமத்துவத்தை நிலை நாட்டும் விதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
மேலும், பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பது, குழந்தை திருமணம், பெண் சிசுக்கொலை, பாலியல் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளை முற்றிலும் ஒழித்திட அனைவரும் உறுதி ஏற்கும் வகையில், கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டது,'' என்றார்.
அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட, பொதுமக்கள் கையெழுத்திட்டு, உறுதிமொழி ஏற்று கொண்டனர். மாவட்ட எஸ்.பி., பிருந்தா, மாவட்ட சமூக நீதி அலுவலர் பிரவீணா தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.
