/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி மலை மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டம்
/
நீலகிரி மலை மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டம்
ADDED : மார் 20, 2024 01:19 AM
ஊட்டி;ஊட்டியில் மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்க கூட்டம் நடந்தது.சங்கத் தலைவர் தும்பூர் போஜன் தலைமை வகித்தார். நீலகிரி மாவட்டத்தில் விவசாய சங்கங்கள் பிரதிநிதிகள் மற்றும், 6 வட்டத்தை சேர்ந்த தலைவர்கள் உட்பட, விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 'மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றவில்லை. மத்திய வர்த்தகத்துறை, 1977ல் பிறப்பித்த, குறைந்தபட்ச ஏலத் தொகையாக, ஒரு கிலோ தேயிலைத் துாள், 200 ரூபாய்க்கு ஏலம் எடுக்க வேண்டும்.
தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை அனைத்தும், நேரடியாக ஏல மையத்திற்கு கொண்டுவர வேண்டும். தனியார் தேயிலை தொழிற்சாலைகள், தங்களது தேயிலை துாளை சில்லறை வர்த்தகத்தில் விற்க கூடாது என்ற உத்தரவை அமல் செய்யப்படாத நிலையில், வரும் தேர்தலின் போது, வேட்பாளர்களின் பிரசாரத்தை புறக்கணிப்பது,' என, முடிவு செய்யப்பட்டது.

