/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு; தாசில்தாரிடம் மனு
/
டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு; தாசில்தாரிடம் மனு
டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு; தாசில்தாரிடம் மனு
டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு; தாசில்தாரிடம் மனு
ADDED : நவ 14, 2025 09:04 PM

கோத்தகிரி: கோத்தகிரி கேர்கம்பை கிராமத்தில், டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், கலெக்டர்மற்றும் தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
கோத்தகிரி கேர்கம்பை பகுதியில், பேரகணி, உல்லத்தட்டி, ஜக்கக்கம்பை, ஓடேன், கன்னேரி, காக்காசோலை, காவிலோரை, இந்திரா நகர், எரிசி பெட்டா மினிதேன் மற்றும் வில்லியட்டி சுற்று வட்டார கிராமல்களில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
கடந்த காலங்களில், சேர்கம்பை பகுதியில் வைக்கப்பட்ட டாஸ்மாக் கடை, பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது அதே இடத்தில், டாஸ்மாக் மதுக்கடைய அமைக்க, நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி, இப்பகுதி ஒட்டுமொத்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இங்கு டாஸ்மாக் கடை அமையும் பட்சத்தில், பலதரப்பு மக்கள் வசிக்கும் இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதுடன், குடிமகன்களால் பல குடும்பங்கள் சீரழியும். இளைஞர்களின் நிலைமை கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளதாக கூறி, எட்டூர் தலைவர் ஆலாகவுடர் தலைமையில், மாவட்ட கலெக்டர் மற்றும் கோத்தகிரி தாசில்தாரிடம் மக்கள் மனு அளித்தனர்.

