/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆபத்தை உணராத மாணவர்கள்; மினி பஸ்களில் படிக்கெட்டில் பயணம்
/
ஆபத்தை உணராத மாணவர்கள்; மினி பஸ்களில் படிக்கெட்டில் பயணம்
ஆபத்தை உணராத மாணவர்கள்; மினி பஸ்களில் படிக்கெட்டில் பயணம்
ஆபத்தை உணராத மாணவர்கள்; மினி பஸ்களில் படிக்கெட்டில் பயணம்
ADDED : டிச 02, 2025 06:07 AM

குன்னுார்: குன்னுார் மினி பஸ்களில், மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
குன்னுார் பகுதிகளில், அரசு பஸ்கள் மற்றும் மினி பஸ்களில் 'பீக் - ஹவர்ஸ்' நேரங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
மவுன்ட் ரோட்டில் இருந்து, சிம்ஸ் பார்க் வரையிலான மினி பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது.
இந்த பகுதிகளில், மேரீஸ் பள்ளி, கான்வென்ட், ஸ்டேன்ஸ், அந்தோனியார் பள்ளி, ஐ.டி.ஐ., உள்ளதால், காலை மற்றும் மாலை நேரங்களில் மினி பஸ்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. மாணவர்கள் ஆபத்தை உணராமல், படிக்கெட்டில் நின்று பயணம் செய்வது தொடர்கிறது.
இரு சக்கர வாகனங்களை மட்டும் குறிவைத்து அபராதம் விதிக்கும் போலீசார், மினி பஸ்களில் விதிமீறல்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இதே போல, குன்னுார்- ஊட்டி இடையே இந்நேரங்களில் குறைவான பஸ்கள் இயக்குவதால், சமவெளி பகுதியில் வரும் பஸ்களில், பயணிகள் நெரிசலில் ஊட்டிக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
எனவே, வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு மேற்கொண்டு தீர்வு காண வேண்டும்.

