/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரயில்வே கேண்டீன் திடீர் மூடல்: சுற்றுலா பயணிகள் 'அப்செட்'
/
ரயில்வே கேண்டீன் திடீர் மூடல்: சுற்றுலா பயணிகள் 'அப்செட்'
ரயில்வே கேண்டீன் திடீர் மூடல்: சுற்றுலா பயணிகள் 'அப்செட்'
ரயில்வே கேண்டீன் திடீர் மூடல்: சுற்றுலா பயணிகள் 'அப்செட்'
ADDED : நவ 14, 2025 09:06 PM

குன்னுார்: குன்னுார் ரயில் நிலையத்தில் கேண்டீன் திடீரென மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாக்கினர்.
நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேட்டுப்பாளையம் -குன்னுார்- - ஊட்டி மலை ரயிலில் வருகை தரும் சுற்றுலா பயணிகள், குன்னுார் ரயில் நிலையத்தில் உள்ள கேண்டீனில் உணவு மற்றும் டீ மற்றும் குடிநீர் பெற்று பயனடைகின்றனர்.
இந்நிலையில், நேற்று திடீரென கேண்டீன் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உணவு இல்லாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேட்டுப்பாளையத்தில் காலை, 7:10 மணிக்கு, ஊட்டிக்கு மலை ரயிலில் புறப்பட்ட சுற்றுலா பயணிகள் காலை, 10:20 மணிக்கு குனனுார் வந்து சேர்ந்தனர்.
பலருக்கும் உணவு, தேநீர் கிடைக்காமல் சிரமப்பட்டனர். தொடர்ந்து காலை, 10:40 மணிக்கு இந்த ரயில் ஊட்டிக்கு சென்ற நிலையில், வெளிப்பகுதியில் சென்று பொருட்களை வாங்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'உணவு தயாரிக்கும் மாஸ்டர் அவசர காரியமாக விடுமுறைக்கு சென்றதால் மூடப்பட்டது. தொடர்ந்து கேண்டீன் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

