/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண்ணை தாக்கி கொன்ற புலி கன்று குட்டியை இழுத்து சென்றது அச்சத்தில் மாவனல்லா கிராம மக்கள்

ADDED : டிச 09, 2025 06:18 AM
கூடலுார்: மசினகுடி மாவனல்லா அருகே, பெண்ணை தாக்கி கொன்ற புலி, கன்று குட்டியை தாக்கி கொன்று இழுத்து சென்ற சம்பவத்தை தொடர்ந்து கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
முதுமலை மசினகுடி வனக்கோட்டம், மாவனல்லா பகுதியில் கடந்த, 24ம் தேதி ஆடு மேய்த்து கொண்டிருந்த, நாகியம்மாள், 60, என்பவரை புலி தாக்கி கொன்றது. புலியை பிடிக்க வனத்துறையினர், 3 இடங்களில் கூண்டு வைத்துள்ளனர்.
டிரோன் கேமரா பயன்படுத்தியும், 34 இடங்களில் தானியங்கி கேமராக்கள் வைத்து புலியை தேடும் பணியில், 4 வன குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த,26ம் தேத மேய்ச்சலுக்கு விடப்பட்ட மாட்டை புலி தாக்கியது. காயங்களுடன் மாடு உயிர் தப்பியது.
இந்நிலையில் நேற்று காலை மாவனல்லா குடியிருப்பை ஒட்டி தனியார் விடுதி அருகே மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த, கன்று குட்டியை புலி தாக்கி இழுத்து சென்றது. இந்நிகழ்வை அப்பகுதியினர் நேரில் பார்த்து சப்தமிட்டனர்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், 'புலி, மனிதரை தாக்கும் முன், அதனை விரைந்து பிடிக்க வேண்டும்,'என, வலியுறுத்தினர். வனத்துறையினர், புலி தாக்கி கொன்ற கன்று உடலை மீட்டு, புலியை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டினுள் வைத்தனர். வனச்சரகர் தனபால் மற்றும் வன ஊழியர்கள் அப்பகுதியில் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.