/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடையை சேதப்படுத்திய யானை அச்சத்தில் கிராம மக்கள்
/
கடையை சேதப்படுத்திய யானை அச்சத்தில் கிராம மக்கள்
கடையை சேதப்படுத்திய யானை அச்சத்தில் கிராம மக்கள்
கடையை சேதப்படுத்திய யானை அச்சத்தில் கிராம மக்கள்
ADDED : டிச 09, 2025 06:10 AM

கூடலுார்: கூடலுார் போஸ்பாரா பகுதியில் நள்ளிரவில் முகாமிட்ட காட்டு யானை, கடையை சேதப்படுத்தியது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கூடலுார் ஸ்ரீமதுரை அருகே, முதுமலையை ஒட்டி அமைந்துள்ளது போஸ்பாரா கிராமம். அவ்வப்போது இக்கிராமத்தில் இரவில் முகாமிடும் காட்டு யானை விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதிகாலை 2:00 இப்பகுதியில் நுழைந்த காட்டு யானை, ஜோசப் என்பவரின் பூட்டிய கடையின் ஒரு பகுதியை சேதப்படுத்தி சென்றது. வனத்துறையினர், சேதமடைந்த கடையை ஆய்வு செய்து, யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மக்கள் கூறுகையில், 'இரவில் குடியிருப்பு பகுதிக்குள் முகாமிடும் காட்டு யானை, விவசாய பயிர்கள், வீடுகளை செய்தப் படுத்தி வருகிறது.
மக்களை தாக்கும் ஆபத்து உள்ளது. எனவே, பிரச்னைக்கு வனத்துறை நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

