ADDED : ஜூலை 07, 2026 01:03 AM
புதுக்கோட்டை: தனியார் நிதி நிறுவனத்தில், போலி ஆவணம் சமர்ப்பித்து கடன் வாங்கி மோசடி செய்த ஏழு பேர் கைதாகினர்.
புதுக்கோட்டை மாவட்டம், முதுகுளத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார், 44, அண்டக்குளம் குமரேசன், 46, பாப்புடையான்பட்டி பாஸ்கர், 50, ராக்கத்தான்பட்டி மோதிலால்நேரு, 41, தெம்மாவூர் நடராஜன், 56, கிள்ளுக்குளவாய்ப்பட்டி பழனிசாமி, 54, மோசகுடி பாக்யராஜ், 53, ஆகிய, ஏழு பேரும், தஞ்சாவூர் மாவட்டம், பூதலுாரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், தங்கள் மனைவி பெயரில் சொத்துக்களை அடமானம் வைத்து, தனித்தனியாக கடன் பெற்றனர்.
இ வர்கள், ஏழு பேரும் சேர்ந்து மொத்தம், 79.9 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய நிலையில், கடனை முறையாக திருப்பி செலுத்தவில்லை. அதன்பின், அவர்கள் சமர்ப்பித்த சொத்து ஆவணங்களை சரிபார்த்தபோது, அவை போலியானவை என தெரிந்தது.
புகாரில், புதுக்கோட்டை குற்றப்பிரிவு போலீசார், சுரேஷ்குமார் உட்பட ஆறு பேரை கைது செய்து, பாக்யராஜை தேடுகின்றனர். மேலும், மோசடிக்கு உடந்தையாக இருந்த, நிதி நிறுவன மேலாளர் தேசி ங்குராஜன், 40, என்பவரையும் கைது செய் தனர்.
